Connect with us

இந்தியா – ஆஸ்திரேலியா டி20 தொடரின் வெற்றியாளர் யார்? ஜாகீர் கான் அதிர்ச்சியூட்டும் கணிப்பு!

Sports

இந்தியா – ஆஸ்திரேலியா டி20 தொடரின் வெற்றியாளர் யார்? ஜாகீர் கான் அதிர்ச்சியூட்டும் கணிப்பு!

மும்பை:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இதில், ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வென்றது.

இதனைத் தொடர்ந்து, இந்தியா-ஆஸ்திரேலியா டி20 தொடர் தொடங்கவுள்ளது. முதல் டி20 போட்டி அக்டோபர் 29ம் தேதி நடைபெறவுள்ளது. ஒருநாள் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தொடரின் வெற்றியாளர் குறித்து இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி, இந்த தொடரை இந்தியா வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும், இந்திய அணியில் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடுவார் என்றும், ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட் சிறந்து விளங்குவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை 2-வது சுற்றில் வெளியேறல்

More in Sports

To Top