Connect with us

மகளிர் பிரீமியர் லீக்: வீராங்கனைகள் ஏலம் நடைபெறும் தேதி அறிவிப்பு…

Sports

மகளிர் பிரீமியர் லீக்: வீராங்கனைகள் ஏலம் நடைபெறும் தேதி அறிவிப்பு…

புதுடெல்லி,
வரும் ஜனவரி–பிப்ரவரியில் இந்தியாவில் நடைபெற உள்ள 4வது மகளிர் பிரீமியர் லீக் (WPL) டி20 தொடருக்கான வீராங்கனை ஏலம் டெல்லியில் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை 5 அணிகளும் பங்கேற்கின்றன.

ஏலத்திற்கான இறுதி பட்டியலில் மொத்தம் 277 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இதில் 194 பேர் இந்தியர்களும், 83 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும். இவர்களில் இருந்து 73 பேர் மட்டுமே அணிகளால் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த ஏலத்தில் அதிக கவனம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுபவர்கள் தீப்தி சர்மா, ஹர்லீன் தியோல், பிரதிகா ராவல், நியூசிலாந்தின் சோபி டிவைன், இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன், ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி மற்றும் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் ஆகியோர். இவர்களுக்கு உயர்ந்த ஏலத் தொகை வரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒருநாள்: நியூசிலாந்து முன்னணி வீரர் விலகினார்

More in Sports

To Top