Connect with us

WPL 2025: ஆஸி கேப்டன் அலிசா ஹீலி Unsold!

Sports

WPL 2025: ஆஸி கேப்டன் அலிசா ஹீலி Unsold!

புதுடெல்லி:
5 அணிகள் பங்கேற்கும் 4வது மகளிர் பிரீமியர் லீக் (WPL) டி20 கிரிக்கெட் போட்டி ஜனவரி–பிப்ரவரி மாதங்களில் நடக்க உள்ளது. இதற்கிடையில் வீராங்கனைகள் ஏலம் இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது.

ஏலத்தில் சமீபத்திய உலகக் கோப்பை போட்டியில் முக்கிய பங்காற்றிய இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் கிரந்தி கவுட், ரேணுகா சிங், சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, சினே ராணா, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மெக் லானிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்டு, நியூசிலாந்தின் அமெலியா கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், நடினே டி கிளெர்க், மற்றும் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் ஆகியோர் அதிக விலைக்கு வாங்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, அடிப்படை விலை ரூ. 50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட தீப்தி சர்மாவை ரூ. 3.20 கோடிக்கு உபி வாரியர்ஸ் வாங்கினார். சோபி எக்லெஸ்டோன் ரூ. 85 லட்சத்திற்கு, மெக் லானிங் ரூ. 1.9 கோடிக்கு உபி வாரியர்ஸ் அணியே வாங்கியது.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலியை ஏலத்தில் வாங்க ஆர்வம் காட்டவில்லை. அடிப்படை விலை ரூ. 50 லட்சம் இருந்த அவர் ஏலத்தில் விலை போகவில்லாமல் போனது, இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சொந்த மண்ணிலேயே இந்தியா அணி ஒயிட்வாஷ்

More in Sports

To Top