Connect with us

உலக செஸ் கோப்பை: பிரக்ஞானந்தா 4-வது சுற்றில் ரஷிய வீரர் டேனியலை எதிர்கொள்கிறார்

Sports

உலக செஸ் கோப்பை: பிரக்ஞானந்தா 4-வது சுற்றில் ரஷிய வீரர் டேனியலை எதிர்கொள்கிறார்

பனாஜி,
11வது பீடே உலக செஸ் கோப்பை கோவாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 26ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டி 8 சுற்றுகளாக நாக்அவுட் முறையில் நடைபெறுகிறது. 82 நாடுகளைச் சேர்ந்த 206 முன்னணி வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

முதல் சுற்றில் 156 பேர் ஆடியதில் 78 பேர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். உலக சாம்பியன் டி. குகேஷ் உள்ளிட்ட முன்னணி 50 வீரர்கள் நேரடியாக 2வது சுற்றில் விளையாடினர். 3வது சுற்று கடந்த 7ஆம் தேதி தொடங்கியது, இதில் 10 இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.

3வது சுற்று முடிவில் அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா, பிரணவ், அரி கிருஷ்ணா, கார்த்திக் வெங்கட்ராமன் ஆகியோர் 4வது சுற்றுக்கு முன்னேறினர். அதே சமயம், விதித் குஜராத்தி, எஸ்.எல். நாராயணன், டி. குகேஷ், பிரனேஷ், தீப்தியான் கோஷ் ஆகியோர் வெளியேறினர்.

இன்று ஓய்வுநாள். நாளை (செவ்வாய்க்கிழமை) 4வது சுற்று தொடங்குகிறது. முதல் ஆட்டம் நாளை, இரண்டாவது ஆட்டம் 12ஆம் தேதி, தேவைப்பட்டால் டைபிரேக்கர் 13ஆம் தேதி நடைபெறும். மொத்தம் 32 வீரர்கள் இச்சுற்றில் மோதவுள்ளனர்.

சென்னை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 4வது சுற்றில் ரஷியாவின் டேனியல் டுபோவை எதிர்கொள்கிறார். அர்ஜூன் எரிகைசி அங்கேரியின் பீட்டர் லிகோவையும், பிரணவ் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பேக் வீரரையும், அரி கிருஷ்ணா சுவீடனின் நில்ஸ் கிராண்டிலியசையும், கார்த்திக் வெங்கட்ராமன் வியட்நாமின் லீம் லெகுவாங்கையும் எதிர்கொள்கிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தல் டெஸ்ட்: இந்திய அணியை அறிவித்த பார்த்தீவ் படேல் – 2 தமிழக வீரர்கள் சேர்ப்பு!

More in Sports

To Top