Connect with us

“மீண்டும் தள்ளிப்போகிறதா ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ்? புது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு எப்போது?!”

Cinema News

“மீண்டும் தள்ளிப்போகிறதா ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ்? புது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு எப்போது?!”

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னர் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது ஜனவரி 26ல் வெளியாகவில்லை என்றும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் சில மாதங்கள் தள்ளிப் போக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்தாலும் தற்போது VFX உள்பட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் ஒரு சில மாதங்கள் இந்த பணிகள் முடிவடைய காலம் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிகிறது.

எனவே ‘தங்கலான்’ படத்தை வரும் கோடை விடுமுறை தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இந்த திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “ரஜினி 173 ஏப்ரலில் தொடக்கம் – சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் மெகா படம்”

More in Cinema News

To Top