Connect with us

“சிம்புவின் STR 48 படம் ‘பாகுபலி’ அளவுக்கு இருக்கும்..! பிரபலம் சொன்ன விஷயம்?!”

Cinema News

“சிம்புவின் STR 48 படம் ‘பாகுபலி’ அளவுக்கு இருக்கும்..! பிரபலம் சொன்ன விஷயம்?!”

நடிகர் சிம்புவின் அடுத்த படம் பாகுபலி அளவுக்கு பிரமாண்டமாக இருக்கும் என்றும் இந்தியாவில் ஐந்து முக்கிய இயக்குனர்களை தேர்வு செய்ய வந்தால் அதில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இன்னும் ஒரு சில வருடங்களில் இருப்பார் என்றும் நடிகர் ரக்சன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் ’STR 48’ என்ற படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த சில பிரமிக்க வைக்கும் தகவல்கள் வெளியாகி ஆச்சரியப்படுத்தி வருகிறது,. அந்த வகையில் தேசிங்கு பெரியசாமி இயக்கிய ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படத்தில் நடிகராக மட்டுமே உதவி இயக்குனராகவும் பணிபுரிந்த விஜய் டிவி ரக்சன் சமீபத்தில் அளித்த பேட்டியில் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

தேசிங்கு பெரியசாமி கதை சொல்லும் போதே பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் அவர் சொல்லும் விதத்தை கூர்ந்து கவனித்தால் அந்த கதையின் உலகிற்கு நாம் சென்று விடுவோம் என்று தெரிவித்தார்.

சிம்பு நடிக்கும் படத்தை தேசிங்கு பெரியசாமி பிரம்மாண்டமாக கொண்டு வருவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அந்த படத்தின் கதை என்னவென்று எனக்கு தெரியாது என்றாலும் அவர் கூறிய சில விஷயங்களை பார்த்த போது அந்த படம் நிச்சயம் ’பாகுபலி’ அளவுக்கு பிரமாண்டமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்திய அளவில் சிறந்த இயக்குனர்கள் என ஒரு ஐந்து இயக்குனர்களை தேர்வு செய்தால் அதில் ஒருவராக தேசிங்கு பெரியசாமி விரைவில் இடம் பெறுவார் என்றும் அந்த அளவுக்கு அவரிடம் திறமை இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? மின் துறை அமைச்சருக்கு சவால் விட்ட அன்புமணி..!!

More in Cinema News

To Top