Connect with us

VJ அர்ச்சனா வாங்கிய பிரம்மாண்ட சொகுசு கார் – வைரல் வீடியோ

Cinema News

VJ அர்ச்சனா வாங்கிய பிரம்மாண்ட சொகுசு கார் – வைரல் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் இருக்கும் பிரபல தொகுப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்பவர் VJ அர்ச்சனா . டிவி நிகழ்ச்சிகள், பேட்டிகள், விருது விழாக்கள், பட விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் இவர் கால்பதிக்காத இடங்களே கிடையாது.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் என்ற அந்தஸ்தை பெற்ற அர்ச்சனா உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் ஷோவுக்கு போட்டியாளராக சென்று அங்கேயும் ஒரு கலக்கு கலக்கினார் .

இந்நிலையில் தற்போது சொந்தமாக youtube சேனல் ஒன்றையும் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தி அர்ச்சனா தனது குடும்பத்துடன் சென்று சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.

சொகுசு கார்களின் க்ளாஸிக் கிங் என அழைக்கப்படும் Mercedes-Benz GLC ரக காரை தான் அர்ச்சனா வாங்கியுள்ளார் . சுமார் ஒரு கோடி ருபாய் மதிப்புடைய இந்த காரை வாங்க 25 வருடம் உழைத்ததாகவும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தனது புது காருடன் எமோஷ்னலாக அர்ச்சனா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/C5N3iyEvFG1/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எழுந்து நில் தமிழா – நவம்பர் 5, TVK தலைவர் அறிவிப்பு

More in Cinema News

To Top