Connect with us

விஜய் போல சைக்கிளில் சென்று வாக்களித்த விஷால் – கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்..!!!

Cinema News

விஜய் போல சைக்கிளில் சென்று வாக்களித்த விஷால் – கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்..!!!

மக்களவை தேர்தலில் தனது வாக்கினை செலுத்த நடிகர் விஷால் சைக்கிளில் சென்ற சம்பவம் தற்போது பெரும் பேச்சு பொருளாக வலம் வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில் பொது மக்கள் திரை பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது பொன்னான வாக்குகளை பதிவு செய்தனர் .

இந்நிலையில் நடிகர் விஷால் சென்னை அண்ணா நகரில் உள்ள வாக்கு சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்துள்ள சம்பவம் பெரும் பெரும் பேச்சு பொருளாக மாறியுள்ளது .

இதற்கு முன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது சைக்கிளில் நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார் அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலானது . இந்நிலையில் மக்களவை தேர்தலில் நடிகர் விஷாலும் சைக்கிளில் வந்து வாக்களித்துவிட்டு சென்றுள்ளார்.

இதை கண்ட விஜய் ரசிகர்கள் விஜய்யை காப்பி அடிப்பதாக கூறி விஷாலை பங்கமாக கலாய்த்து வருகின்றனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிம்புவுக்கான ஸ்கிரிப்ட் ரஜினிக்கா? தலைவர் 173 பற்றி வைரல் ஆன தகவல்!

More in Cinema News

To Top