Connect with us

வீடியோ: 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்களா விராட், ரோஹித்? — ஹெட்டின் பதில் வைரல்!

Sports

வீடியோ: 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்களா விராட், ரோஹித்? — ஹெட்டின் பதில் வைரல்!

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இந்திய அணியின் சுற்றுப்பயணத்துக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடர் அக்டோபர் 19ஆம் தேதி ஆரம்பமாகிறது. சுப்மன் கில் தலைமையில் புதிய இந்திய அணி களமிறங்குகிறது.

இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மீண்டும் களமிறங்குவார்களா என்ற கேள்வி தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமான வீரர்களாக கருதப்படுகின்றனர். குறிப்பாக 2027 உலகக் கோப்பை வரை விளையாடி அதற்குப் பிறகு ஓய்வு பெறவேண்டும் என்பது அவர்களின் நீண்டநாள் கனவாக கூறப்படுகிறது.

ஆனால் அணித் தேர்வுக்குழு இளம் வீரர்களை முன்னிலைப்படுத்தும் நோக்கில் விராட் மற்றும் ரோகித்தை ஓய்வு பெறச் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் 2027 உலகக் கோப்பையில் அவர்கள் விளையாடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட்டிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது –
“விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இந்தியாவின் மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டின் பெருமை. விராட் கோலி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர் என நான் நம்புகிறேன். ரோகித் சர்மாவின் தொடக்க ஆட்டத்தில் ஆடும் பாணி எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தருகிறது. அவர்கள் இருவரும் கிரிக்கெட்டுக்கு இன்னும் பல வருடங்கள் கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன்.

அவர்கள் 2027 வரை விளையாடினால் அது இந்தியாவுக்கும் உலக கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய வரமாக இருக்கும். அவர்களை நாம் மிஸ் செய்யப்போகிறோம் என்பது உறுதி. ஆனால் அவர்கள் மீண்டும் உலகக் கோப்பையில் விளையாடுவார்கள் என்று நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  IND vs SA: “இந்தியா ஜெயிக்க ராகுல்தான் காரணம்… ஆனால் இந்த தவறு செய்யாதீங்க” – ஸ்ரீகாந்த்

More in Sports

To Top