Connect with us

இரண்டாவது ஆஸ்திரேலியா போட்டியிலும் விராட் கோலி டக் அவுட் – ரசிகர்கள் அதிர்ச்சி

Sports

இரண்டாவது ஆஸ்திரேலியா போட்டியிலும் விராட் கோலி டக் அவுட் – ரசிகர்கள் அதிர்ச்சி

அடிலெய்டு:
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி தற்போது 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் மோசமான தோல்வியை சந்தித்தது.

இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் கடந்த 17 ஆண்டுகளாக இந்திய அணி தோல்வியை சந்திக்காத நிலையில், இன்று வெற்றி பெற்று தொடரை தக்கவைத்துக் கொள்வது இந்திய அணியின் முக்கிய இலக்காக உள்ளது.

அடிலெய்டு மைதானத்தில் இதுவரை 5 சதங்களுடன் 975 ரன்கள் எடுத்திருக்கும் விராட் கோலி மீண்டும் பளபளப்பாக ஆடுவார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், கடந்த போட்டியில் போலவே இன்றைய போட்டியிலும் அவர் 4 பந்துகளில் ரனே எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இது கோலியின் ஒருநாள் கிரிக்கெட் கரியரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆவது முதல்முறையாகும். இதனால் கோலி ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அடிலெய்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி 16 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 54 ரன்கள் எடுத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் கையெழுத்திட்ட வித்தியாசமான சாதனை

More in Sports

To Top