Connect with us

“மிரட்டும் மம்மூட்டியின் பிரம்மயுகம் பட ஹீரோயின் Character Poster..! Viral!”

Cinema News

“மிரட்டும் மம்மூட்டியின் பிரம்மயுகம் பட ஹீரோயின் Character Poster..! Viral!”

கடந்த ஆண்டு மட்டும் மலையாள நடிகர் மம்மூட்டி 4 படங்களில் நடித்து வெளியிட்டுள்ளார். மம்மூட்டி கம்பெனி என தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்திலேயே தொடர்ந்து கம்மி பட்ஜெட்டில் தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து மாஸ் காட்டுகிறார். 2022ல் 5 படத்தை ரிலீஸ் செய்திருந்தார். கடந்த ஆண்டு நண்பகல் நேரத்து மயக்கம், கிறிஸ்டோபர், காதல் தி கோர் மற்றும் கன்னூர் ஸ்குவாட் உள்ளிட்ட 4 படங்களை வெளியிட்டார்.

அனைத்து ஜானர் படங்களிலும் நடித்து வித்தியாசம் காட்டி வருகிறார் மம்மூட்டி. 2022ம் ஆண்டு வெளியான ரோர்ஷா திரைப்படம் ஹாரர் படமாக வெளியாகி இருந்தது. கடைசி வரை பல விஷயங்கள் அந்த படத்தில் புரியாத புதிராகவே இருக்கும். இந்நிலையில், அடுத்து உருவாகி வரும் பிரம்மயுகம் படமும் ஹாரர் கான்செப்ட் தான் என்கின்றனர். மம்மூட்டிக்கு ஜெயிலர் படத்தில் வில்லன் வாய்ப்பு கிடைக்க இருந்த நிலையில், மம்மூட்டியை அடிக்க முடியாது என்பதால் ரஜினி அதை தவிர்த்து விட்டார்.

விநாயகம் லுக்கிற்கு மம்மூட்டி இறங்கி நடிக்க மாட்டார் என கமெண்ட்டுகள் வெளியான நிலையில், பிரம்மயுகம் போஸ்டரை பார்த்து மிரண்டே போய் விட்டனர். அந்தளவுக்கு டெரரான வில்லனாக மம்மூட்டி போஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில், தற்போது பிரம்மயுகம் படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் அமல்டா லிஸ் (Amalda Liz) ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மம்மூட்டி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன் பழங்குடியின பெண்ணாக தோற்றம் அளித்தது போல அமல்டா லிச் லுக் இருக்கிறது. ஆனால், அதை விட ஆச்சர்யப்படுத்தும் விதமாக மேலாடை அணியாமல் தனது கூந்தலை வைத்து முன்னழகை மறைத்தபடி போஸ் கொடுத்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ராகுல் சதாசிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் கலர் டோன் எல்லாம் கருப்பு நிறத்தில் பயங்கரமாக இருக்கிறது. இந்த ஆண்டுக்குள் இந்த ஹாரர் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷ் இயக்கி நடிக்கும் 'ராயன்' படத்தின் முதல் பாடலை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top