Connect with us

சியான் விக்ரம் 63 – நாயகி யார் தெரியுமா? எதிர்பாராத கூட்டணி!

Cinema News

சியான் விக்ரம் 63 – நாயகி யார் தெரியுமா? எதிர்பாராத கூட்டணி!

Vikram 63 Update: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கும் விக்ரம் மீண்டும் ஒரு முறை ரசிகர்களை கவர தயாராகி வருகிறார். ஒவ்வொரு படத்திலும் தனது தோற்றத்தையும் உடல்மொழியையும் முழுமையாக மாற்றி, கதைக்கேற்ப புதிய அவதாரத்தில் வெளிவரும் விக்ரம், தற்போது 63-ஆவது படத்திற்காக தீவிரமாக தயாராகி வருகிறார்.

விக்ரம் 63 – மடோன் அஸ்வின் இயக்கம்

இந்த படத்தை ‘மடோன் அஸ்வின்’ இயக்கவுள்ளார். அவர் இயக்கிய மாவீரன் படத்திற்குப் பிறகு அவரது மிகப்பெரிய முயற்சியாகக் கருதப்படுகிறது. இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் மிகுந்த பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளது.

முன்பு அந்நியன், ஐ, தங்கலான் போன்ற படங்களில் விக்ரம் தனது உடல் மாற்றம், கதாபாத்திரத்தில் மூழ்கும் நடிப்பு ஆகியவற்றால் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தது போலவே, இந்த புதிய படத்திலும் அவர் அசத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகி உள்ளது.

அதிரடி அப்டேட் – நாயகி யார் தெரியுமா?

இந்நிலையில், விக்ரம் 63 குறித்து ஒரு சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சமீபத்தில் GOAT படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்த மீனாட்சி செவுத்திரி, இப்போது விக்ரம் நாயகியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது விக்ரம் ரசிகர்களுக்கும், மீனாட்சி ரசிகர்களுக்கும் மிகப்பெரிய சர்ப்பிரைஸாக உள்ளது, ஏனெனில் இருவரும் திரையில் இணைவது எதிர்பாராத காம்பினேஷன். இந்த இணைப்பு சினிமா ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் பேசுபொருளாகி வருகிறது.

இந்த தகவல் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் அல்லது குழுவினர் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "சுறா" வசனம் வைரல் – TVK தலைவர் விஜய்யை குறிவைக்கும் ட்ரோல் அலையால் அரசியல் சூடு!

More in Cinema News

To Top