Connect with us

“இந்த உலகம் உனக்கானதில்லை! விஜய் ஆண்டனியின் மனைவி பகிர்ந்த Emotional Post!”

Cinema News

“இந்த உலகம் உனக்கானதில்லை! விஜய் ஆண்டனியின் மனைவி பகிர்ந்த Emotional Post!”

விஜய் ஆண்டனிக்கு மீரா, லாரா என்ற இரண்டு மகள்கள் இருந்தார்கள். அவர்களில் மீரா 12ஆம் வகுப்பு படித்துவந்தார். அவர் கடந்த ஒரு ஆண்டாக மன உளைச்சலில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை எடுத்துவந்ததாகவும் கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை விஜய் ஆண்டனியை உடைந்து போக செய்திருக்கிறது.

மகள் தற்கொலை செய்துகொண்டது விஜய் ஆண்டனியையும் அவரது மனைவியையும் கடுமையாக பாதித்திருக்கிறது. விஜய் ஆண்டனி உச்சக்கட்ட சோகத்துக்கு சென்றார். ஒருவழியாக மெல்ல மெல்ல மீண்டிருக்கும் விஜய் ஆண்டனி ஷூட்டிங்கில் கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார். இருந்தாலும் மகள் இல்லாத வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதுதான் உண்மை.

மீரா இயல்பிலேயே இரக்க குணம் படைத்தவர் என்றும் அமைதியாக இருப்பார் என்றும் விஜய் ஆண்டனி வீட்டு பணியாளர்களும் தெரிவித்தனர். இன்னும் சொல்லப்போனால் மீராவின் இழப்பு ரசிகர்கள் பலரிடமும் சோகத்தை ஏற்படுத்தியது. விஜய் ஆண்டனி ஷூட்டிங்கில் கலந்துகொண்டாலும் அவரது மனைவி; மகள் இறப்புக்கு பிறகு எப்படி இருக்கிறார் என்பது கடந்த சில மாதங்களாகவே தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா மீரா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “மீரா தங்கமே உனது பியானோ உன்னுடைய தொடுதலுக்காக ஏங்கி காத்திருக்கிறது. நாங்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து இருக்கிறோம். நீ சீக்கிரம் சென்றுவிட்டாய். இந்த உலகம் உனக்கானது இல்லை.

ஆனால் உனது அம்மாவாகிய நான் இன்னும் இங்கே இருக்கிறேன். வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையிலான கான்செப்ட்டை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் உன்னை சந்திக்கும்வரை சாப்பிட்டுவிட்டு நன்றாக இரு. லாராவும் உன்னை ரொம்பவே மிஸ் செய்கிறார்” என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவுக்கு கீழே கமெண்ட்ஸ் செக்‌ஷனில் பலரும் ஃபாத்திமாவுக்கு ஆறுதல் கூறிவருகிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top