Connect with us

“தனுஷை நேரடியாக சீண்டிய விக்னேஷ் சிவன்? 😳 நயன் B’day gift வைரல்!”

Cinema News

“தனுஷை நேரடியாக சீண்டிய விக்னேஷ் சிவன்? 😳 நயன் B’day gift வைரல்!”

நயன்தாரா நேற்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடினார். ரசிகர்கள், நண்பர்கள், திரை பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை பொழிந்து கொண்டிருந்தனர். இதையே சிறப்பாக்கும் வகையில், அவரது கணவர் விக்னேஷ் சிவன், சுமார் 9 கோடி மதிப்புள்ள சொகுசு காரை பரிசளித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார்.

அந்த பரிசுப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த விக்னேஷ் சிவன், தனுஷை மறைமுகமாக சீண்டும் போல ஒரு caption போட்டிருந்தார். குறிப்பாக, தனுஷ் அடிக்கடி மேடைகளில் சொல்லும் “எண்ணம் போல் வாழ்க்கை” என்ற வரியை பயன்படுத்தியிருந்ததால், அது தற்போது இணையத்தில் பெரிய விவாதமாகி வருகிறது.

2015ல் வெளியான ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் முதல் முறையாக நெருக்கமானார்கள். இந்த அறிமுகம் காதலாக மாறி, ஜோடி பின்னர் 2022ல் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டது. அவர்களின் திருமணத்தை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படம் “Nayanthara: Beyond The Fairy Tale” கடந்த ஆண்டே வெளிவந்தது.

இந்த ஆவணப்படத்தைத் தயாரிக்கும் போது, “நானும் ரவுடிதான்” படத்தின் ஒரு 3 விநாடி கிளிப்பைப் பயன்படுத்த அனுமதிக்க தயாரிப்பாளர் தனுஷ் தாமதம் செய்ததாகவும், அதற்காக 10 கோடி ரூபாய் கோரியதாகவும் நயன்தாரா தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பை விவரிக்கும் போது, தனுஷ் பயன்படுத்தும் “ஓம் நமச்சிவாயா” என்ற தொடக்கச் சொல்லையும் நயன்தாரா சுட்டிக்காட்டியிருந்தார். இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இவ்வளவு கோர்ட் பிரச்சனை நடந்து வரும் நேரத்தில், விக்னேஷ் சிவன் திடீரென அந்த சொகுசு கார் புகைப்படத்தை பதிவிட்டு, “எண்ணம்போல் வாழ்க்கை” எனக் குறிப்பிட்டது தனுஷ் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

“தனுஷ் உங்களை எங்கும் விமர்சிக்கவில்லை… ஆனாலும் நீங்கள் ஏன் அவரைப் பற்றி சீண்டும் வகையில் பதிவிடுகிறீர்கள்?” “புருஷன்–பொண்டாட்டி இருவரும் சேர்ந்து தனுஷை வம்பு இழுப்பதே வேலையாகி விட்டதே!”

இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெகுவாக சர்ச்சை கிளப்பி வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நயன்தாராவின் ஆடம்பர வாழ்க்கை Birthday Special! சொத்து மதிப்பு

More in Cinema News

To Top