Connect with us

“விடாமுயற்சி படத்தின் Pre Bussiness Value இத்தனை கோடியா? ஷாக்கில் Kollywood..!”

Cinema News

“விடாமுயற்சி படத்தின் Pre Bussiness Value இத்தனை கோடியா? ஷாக்கில் Kollywood..!”

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் பிசினஸ் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

’விடாமுயற்சி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்த நிலையில் சென்னை திரும்பிய படக்குழுவினர் மீண்டும் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்று தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்த படப்பிடிப்பில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

அனிருத் இசையில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடும் என்றும் வரும் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிடப்பட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பிசினஸ் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் தொலைக்காட்சி ரிலீஸ் உரிமையை சன் டிவி பெற்று இருப்பதாகவும் சாட்டிலைட் ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்று இருப்பதாகவும் இரண்டும் சேர்ந்து சுமார் 250 கோடி ரூபாய்க்கு பிசினஸ் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட்டை விட அதிக தொகை இந்த பிசினஸ் மூலம் கிடைத்துள்ளதாக கூறப்படுவதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top