Connect with us

திரைப்பட விழாவில் திரையிடப்படவிருக்கும் வெற்றிமாறனின் விடுதலை 1 & 2 படங்கள்! Viral!

Cinema News

திரைப்பட விழாவில் திரையிடப்படவிருக்கும் வெற்றிமாறனின் விடுதலை 1 & 2 படங்கள்! Viral!

2024 – ல் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை 2 இருந்து வருகிறது. இந்த ஆண்டில் வெளியான விடுதலை முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் பங்கேற்க விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த பாகத்தில் கதை, சூரியின் மீது பயணித்த நிலையில், இந்த பாகம் நடிகர் விஜய்சேதுபதியின் மீது பயணிக்கிறது. இந்தப்படத்தில் அவருக்கு ஒரு ஃப்ளாஷ்பேக்கும் இருக்கிறது.

இந்த நிலையில் இந்தப்படம் தற்போது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் “லைம்லைட்” பிரிவில் திரையிட தேர்வாகி இருப்பதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்துடன், அண்மையில் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்ற ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படமும் திரையிட தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல “பிக் ஸ்கிரீன்” பிரிவில் இயக்குனர் ராமின் “ஏழு கடல் ஏழு மலை” படம் திரையிட தேர்வாகி இருக்கிறது. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி துவங்கி பிப்ரவரி 4-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது கவனிக்கத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அனல் பறக்கும் இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்..? அகமதாபாத்தில் இன்று சென்னை - குஜராத் அணிகள் மோதல்..!!

More in Cinema News

To Top