Connect with us

மணற் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட வி.ஏ.ஓ-வின் மகன் சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்வு – சரத்குமார் வாழ்த்து

Cinema News

மணற் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட வி.ஏ.ஓ-வின் மகன் சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்வு – சரத்குமார் வாழ்த்து

அரசு அலுவலகத்தில் மணற் கொள்ளையர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட மறைந்த விஏஓ லூர்து பிரான்சிஸ் மகன் மார்ஷல் ஏசுவடியான் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வென்று உரிமையியல் நீதிபதியாக தேர்வாகி உள்ளார் .

தந்தையை போல் தாமும் நேர்மையுடன் அரசுப் பணியாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் படித்து வந்த மார்ஷல் ஏசுவடியான் இன்று உரிமையியல் நீதிபதியாக தேர்வாகி உள்ளது பாராட்டிற்குரியது.

இந்நிலையில் மார்சலுக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வரும் நிலையில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரும் அவரது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

“தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் சேவியர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மகன் மார்ஷல் ஏசுவடியான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

தந்தை அரசு பணியின் போது கொலை செய்யப்பட்ட சூழ்நிலையை சவாலாக எதிர்கொண்டு, தந்தையை போல் மக்கள் நல செயல்பாடு இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் விடாமுயற்சி, கடின உழைப்புடன் போட்டித்தேர்வுக்கு படித்து சாதனை புரிந்திருக்கும் மார்ஷல் ஏசுவடியான் அவர்களின் பணி சிறக்கவும், தேசிய அளவில் பெருமை சேர்க்கவும் என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Richard Rishi உடன் ரக்ஷனா ஹீரோயின்! Draupadi 2 First Look Trending!”

More in Cinema News

To Top