Connect with us

“தண்ணீர் தண்ணீர் எங்கணும் தண்ணீர் குடிக்கத்தான் இல்லை ஒருதுளி” – மிக்ஜாம் புயல் குறித்து வேதனைக் கவிதை எழுதிய கவிஞர் வைரமுத்து

Cinema News

“தண்ணீர் தண்ணீர் எங்கணும் தண்ணீர் குடிக்கத்தான் இல்லை ஒருதுளி” – மிக்ஜாம் புயல் குறித்து வேதனைக் கவிதை எழுதிய கவிஞர் வைரமுத்து

​​​​​​மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளால் கடும் அவதிக்குள்ளான மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார் கவிஞர் வைரமுத்து.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது . இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் தமிழக அரசின் செயல்பாட்டை பாராட்டி வந்தாலும் மறுபக்கம் அடைப்படை வசதிகள் கூட இல்லமல் அவதிபட்டு வருவதாக வசைபாடியும் வருகின்றனர்.

இந்த பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காக்கவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யம் திரை பிரபலங்கள் பலர் களத்தில் இறங்கியுள்ள நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார் கவிஞர் வைரமுத்து.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து கூறியதாவது :

“‘தண்ணீர் தண்ணீர் எங்கணும் தண்ணீர் குடிக்கத்தான் இல்லை ஒருதுளி’ எனும் ஆங்கிலக் கவிதை நினைவின் இடுக்கில் கசிகிறது வீட்டுக்குத் தண்ணீர் இல்லை என்பது சிறுதுயரம் வீட்டுக்குள்ளேயே தண்ணீர் என்பது பெருந்துயரம் விடியும் வடியும் என்று காத்திருந்த பெருமக்களின் துயரத்தில் பாதிக்கப்படாத நானும் பங்கேற்கிறேன் என் கடமையின் அடையாளமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன் பொருள்கொண்டோர் அருள்கூர்க சக மனிதனின் துயரம் நம் துயரம் இடர் தொடராதிருக்க இனியொரு விதிசெய்வோம்; அதை எந்தநாளும் காப்போம்” என தனது ட்விட்டர் பதிவில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top