Connect with us

32 பந்துகளில் சதம்… சூர்யவன்ஷி அதிரடி! இந்திய ‘ஏ’ அணி அதிரடி வெற்றி

Sports

32 பந்துகளில் சதம்… சூர்யவன்ஷி அதிரடி! இந்திய ‘ஏ’ அணி அதிரடி வெற்றி

தோகா,
வளரும் நட்சத்திரங்களுக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று தொடங்கின. வரும் 23-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து விளையாடுகின்றன. லீக் சுற்றின் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களில் உள்ள அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

தொடக்க நாளில், ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய ‘ஏ’ அணி, ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்காக 14 வயது வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராக களமிறங்கினார். ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடிய அவர், பந்தை நாலாதிசைகளிலும் பறக்கவிட்டு, வெறும் 32 பந்துகளில் சதத்தை கடந்தார்.

இதன் மூலம், 20 ஓவர் கிரிக்கெட்டில் மிக வேகமாக சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரராக ரிஷப் பண்டுடன் இணைந்தார். உலக அளவில் இந்த சாதனையில் 5-வது இடத்தையும் பகிர்ந்துள்ளார். அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி 42 பந்துகளில் 144 ரன்கள் (11 பவுண்டரி, 15 சிக்சர்) எடுத்தார்.

இதனுடன், இந்திய ‘ஏ’ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது. கேப்டன் ஜிதேஷ் ஷர்மா 32 பந்துகளில் 83 ரன்கள் (8 பவுண்டரி, 6 சிக்சர்) சேர்த்தார்.

பதிலுக்கு களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய ‘ஏ’ அணி 148 ரன் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றது.

இந்திய தரப்பில் குர்ஜப்னீத் சிங் 3 விக்கெட்டும், ஹர்ஷ் துபே 2 விக்கெட்டும் பெற்றனர். இந்திய ‘ஏ’ அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மகளிர் உலகக்கோப்பை சாம்பியன் ஹர்மன்பிரீத் கவுருக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

More in Sports

To Top