Connect with us

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நாய்களுக்காக வருத்தப்பட்ட நடிகை த்ரிஷா – பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Cinema News

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நாய்களுக்காக வருத்தப்பட்ட நடிகை த்ரிஷா – பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நாய்களுக்காக வருத்தத்தில் பதிவிட்ட நடிகை த்ரிஷாவை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர் .

வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது . இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக மின் விநியோகம் நடைபெற்று வருகிறது. இருப்பினும் இன்னும் சில பகுதிகளில் வெள்ளம் வடியாமலே இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த வெள்ளத்தில் பொதுமக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறார்களோ அதே அளவிற்கு வாயில்லா ஜீவன்களும் கடுமையாக பாதித்துள்ளது. பொதுமக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் தன்னார்வலர்கள் வாய்யிலா ஜீவன்களுக்கும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நாய்களின் இந்த பரிதாப நிலையை கண்ட நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் வருத்தப்பட்டு பதிவிட்டு இருக்கிறார்.

“Recent cyclone wreaked havoc at our sanctuary” என குறிப்பிட்டு த்ரிஷா ஒரு வீடியோவை அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். இந்நிலையில் அந்த பதிவை கண்ட நெட்டிசன்கள்த்ரிஷாவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர் .

கனமழையிலும் பெரு வெள்ளத்திலும் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி த்ரிஷா ஒரு பதிவு கூட போடவில்லை ஆனால் நாய்கள் அவதிபடுவதை பற்றி மட்டும் பதிவிடுகிறார் என ட்ரோல் செய்து வருகின்றனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கென் கருணாஸ் இயக்கும காதலன் படப்பிடிப்பு பூஜை ஆரம்பம்

More in Cinema News

To Top