Connect with us

மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்…பதிலுக்கு Quote போட்ட திரிஷா!

Cinema News

மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்…பதிலுக்கு Quote போட்ட திரிஷா!

இப்போது அதிகமாக பேசப்பட்டு வருவது மன்சூர் பேசிய விஷயம் தான்,நேற்று முன்தினம் நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து மிகவும் மோசமான வகையில் பேசினார் என்ற வீடியோ வைரலாக பரவியது…

இந்த விஷயம் வைரலாகி பின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது…அனைவரும் இதனை மோசமாக விமர்சித்து இருந்தனர் இவரின் இந்த செயலுக்கு கேஸ் கூட கொடுக்கப்படும் என சொல்லப்பட்டது…அதனை போல பல தரப்பில் வழக்கு கொடுத்து இன்று விசாரணை கூட நடந்தது..

அவர் பேசியது நடிகை திரிஷாவிற்கு கவனத்திற்கு செல்ல மன்சூர் அலிகானை வன்மையாக கண்டித்து அவர் பதிவு ஒன்றை வெளியிட்டார்…இதன்பின் லோகேஷ் கனகராஜ்,கார்த்திக் சுப்ராஜ், சின்மயி, குஷ்பூ,சாந்தனு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் மன்சூர் அலிகானுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்…இவருக்கு எல்லாம் கருணை தரக்கூடாது அவரை மன்னிக்கவும் கூடாது..ஒரு கேவலவாதி இவர் என பல தரப்பில் இருந்து விமர்சனம் வந்தது..

இந்நிலையில் இன்று மன்சூர் அலி கான் மன்னிப்பு சொல்லி இருக்கின்றார் அதாவது எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக என்று பதிவிட்டு இருந்தார்…இது மன்னிப்பா கலாயா என பலரும் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்…

இந்நிலையில் திரிஷா அதற்கு பதிலாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் தவறு செய்வது மனித இயல்பு…மணிப்பதே புனிதம் என்று பதிவிட்டு இருக்கிறார்…இதனால் இந்த பிரச்சனை முடிந்து இருப்பதாக தெரிகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  65 வயது சூப்பர் ஸ்டாருடன் நான்காவது முறையாக கைகோர்க்கும் நயன்தாரா

More in Cinema News

To Top