Connect with us

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் விலகல்

Sports

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் விலகல்

சிட்னி:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்று வருகிறது. முதலாவது ஆட்டம் மழையால் ரத்தானது. மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஹோபார்ட்டில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தது.

இதன்பின், நான்காவது டி20 போட்டி வரும் 6-ஆம் தேதி மற்றும் இறுதி ஐந்தாவது போட்டி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள டி20 போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் டிராவிஸ் ஹெட் விடுவிக்கப்பட்டுள்ளார். வரவிருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான தயாரிப்பை முன்னிட்டு, இந்த முடிவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. இதன் பகுதியாக டிராவிஸ் ஹெட் ஷெபீல்ட் ஷீல்டு தொடரில் பங்கேற்கவுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சென்னை ஓபன் டென்னிஸ்: தமிழக வீராங்கனைக்கு ஏமாற்றம்

More in Sports

To Top