Connect with us

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!!

Cinema News

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!!

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் இணைந்துள்ள புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது .

தமிழ் சினிமாவில் கோமாளி என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் முதல் பாலில் சிக்ஸர் அடித்தது போல் முதல் படத்திலேயே மக்களின் மனதில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி கொண்டார் .

இதையடுத்து லவ் டுடே என்ற படத்தை இயக்கியும் நடித்தும் தயாரிப்பாளருக்கு 100 கோடி கலைக்சனையும் பெற்று கொடுத்தார் . இப்படி தொட்டதெல்லாம் தொலைக்கும் ப்ரதீர்ப் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரதீபுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்க இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் .

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கிய நிலையில் தற்போது இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது .

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 15 ஆண்டுகளுக்குப் பிறகும் மாஸ் குறையாத ‘மங்காத்தா’ – ரீ-ரிலீஸில் ரூ.21.5 கோடி வசூல் சாதனை! 🎬💥

More in Cinema News

To Top