Connect with us

“இந்த ஆண்டு 2023ல் மக்களை ஆட்டம் போட வைத்த Top 5 பாடல்கள் எது எது தெரியுமா?!”

Cinema News

“இந்த ஆண்டு 2023ல் மக்களை ஆட்டம் போட வைத்த Top 5 பாடல்கள் எது எது தெரியுமா?!”

இந்த ஆண்டு திருமண விழாக்கள் முதல் அனைத்து இடங்களிலும், இன்ஸ்டாகிராமில் இளைஞர்களை அதிகமாக ரீல்ஸ் போட வைத்து ஆட்டம் போட வைத்த Top 5 பாடல்களில் கடைசியில் இருந்து பார்க்கலாம்..!

5. ரஞ்சிதமே (Varisu):

விஜய் படங்கள் என்றாலே பாடல்கள் எல்லாமே ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்து விடும். கடந்த ஆண்டு வெளியான ரஞ்சிதமே பாடல் இந்த ஆண்டு வரை ரசிகர்களை ஆட்டம் போட வைத்து வருகிறது. வேறலெவலில் ஹிட் அடித்த வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடனமாடியிருந்தனர். தமன் இசையில் வெளியான அந்த பாடல் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக 2023ல் மாஸ் காட்டியது.

4. Scene ah Scene ah (Maaveeran):

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் இடம்பெற்ற மாவீரன் படத்தின் ஸீனா ஸீனா பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மாவீரன் படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்து இருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற ஸீனா ஸீனா பாடலில் 500க்கும் மேற்பட்டோர் நடனமாடி இருந்தனர். அதிதி ஷங்கர் மற்றும் சிவகார்த்திகேயனின் டூயட் பாடலான வண்ணாரப்பேட்டையில பாடலும் அதிக ரசிகர்களை கவர்ந்தன.

3. மாமதுரை (Jigarthanda Double X):

தீபாவளிக்கு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இடம்பெற்ற “மாமதுரை அன்னக்கிளி” பாடல் ஆண்டு இறுதியில் வெளியாகி ரசிகர்களின் திடீர் ஃபேவரைட் பாடலாக மாறியது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் ராகவா லாரன்ஸ் மரண குத்து குத்திய அந்த பாடலை பாடகி தீ பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2. நா ரெடி (LEO):

தளபதி விஜய்யின் லியோ படத்தில் அனிருத் இசையமைத்த “நா ரெடி” தான் பாடல் இந்த ஆண்டு ஏகப்பட்ட ரசிகர்களை வேறலெவல் ஆட்டம் போட வைத்த பாடலாக மாறியது. ரசிகர்களை மட்டுமின்றி பல பிரபலங்களும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் போட்டனர். பேட் ஆஸ், அன்பெனும் ஆயுதம், ஆர்டினரி பர்ஸன் மட்டுமின்றி அந்த படத்தில் இடம்பெற்ற ரெட்ரோ பாடலான கரு கரு கருப்பாயி பாடலும் ரசிகர்களை ஆட்டம் போட வைத்து வருகிறது.

1. காவாலா (Jailer):

எப்போதுமே நடிகர் விஜய் படத்தின் பாடல்கள் தான் அந்த ஆண்டின் சார்ட் பஸ்டர் லிஸ்ட்டில் முதலிடத்தை பிடிக்கும். ஆனால், இந்த முறை ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் தமன்னா நடனமாடிய காவாலா பாடல் தான் முதலிடத்தை பிடித்துள்ளது. லியோ படத்தை விட ஜெயிலர் படத்திற்கு அனிருத் வேறலெவல் இசை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஹுகும், ரத்தமாரே உள்ளிட்ட பாடல்களும் பலரையும் கவர்ந்தன.

See also  கார்த்தியின் கலக்கலான நடிப்பில் உருவான மெய்யழகன் படத்தின் டீசர் வெளியானது..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top