Connect with us

வீட்டு வேலைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம் – கண்டன குரல் எழுப்பிய பா.ரஞ்சித்

Cinema News

வீட்டு வேலைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம் – கண்டன குரல் எழுப்பிய பா.ரஞ்சித்

திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது மகன் மறுமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தி பெரும் அதிர்ச்சி அளிப்பதாக திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார் .

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் கொத்தடிமை போல நடத்தி, கொடும் சித்திரவதைக்குள்ளாகியதாக செய்தி வெளியாகி உள்ளது.

தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்ணீர்மல்கக் கூறும் அப்பெண்ணின் காணொளியைப் பார்க்கிறபோது நெஞ்சம் பதைபதைக்கிறது.

அப்பெண்ணுக்கு நடந்தேறியது சொல்லவியலா மனிதவதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

எளிய குடும்பப் பின்னணியில் பிறந்ததால், வறுமையையும், ஏழ்மையையும் போக்க வீட்டு வேலைக்குச் சென்ற அப்பெண்ணுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை .

இரவு பகலென்றும் பாராது ஓய்வில்லாத வகையில் கடுமையான வேலைகளைக் கொடுத்து உழைப்பைச் சுரண்டியதோடு மட்டுமல்லாது, நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்குக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

அந்த இளம் பெண்ணை தினந்தோறும் துன்புறுத்தி வந்த அக்குடும்பத்தினரின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

எளிய மனிதர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் இக்கோரத்தாக்குதல்களும், வன்முறைவெறியாட்டங்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய கொடுங்குற்றங்களாகும் என பலரும் ஆவேசமாக கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் திரைபட இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களும் அப்பெண்ணுக்கு நடந்த கொடுமை குறித்து கண்டன குரல் எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது மகன் மறுமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

இக்கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடூம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்ப்போம் என பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் எடை சரியான அளவில் இருப்பதை உறுதி செய்திடுக - TTV தினகரன் வலியுறுத்தல்..!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top