Connect with us

“உண்மை வெளிச்சம் பார்த்தது! ஜாய் கிரிசில்டாவுக்கு சாதக தீர்ப்பு – ரங்கராஜ் கவலையில்!”

madhampatti

Cinema News

“உண்மை வெளிச்சம் பார்த்தது! ஜாய் கிரிசில்டாவுக்கு சாதக தீர்ப்பு – ரங்கராஜ் கவலையில்!”

மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்த மனுவில், ஜாய் கிரிசில்டா சமூக வலைதளங்களில் நிறுவனத்தை தொடர்புபடுத்தி கருத்துகள் பதிவிடக்கூடாது எனத் தடை கோரப்பட்டிருந்தது.

முன்னதாக, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பின்னர், ரங்கராஜுடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இதைத் தடுக்க ரங்கராஜ் தரப்பு உயர்நீதிமன்றத்தை அணுகியது. மேலும், “நிறுவனத்தை தொடர்புபடுத்திய பதிவுகளால் 12.5 கோடி இழப்பு ஏற்பட்டது” என்றும் தனி மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் விசாரணையின் போது, கிரிசில்டா தரப்பு, “நிறுவனம் பற்றியோ அதன் வர்த்தக நடவடிக்கைகள் பற்றியோ எதையும் போஸ்ட் செய்யவில்லை. குறிப்பிட்ட இழப்பு குறித்து எந்த ஆதாரமும் இல்லை. கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தானதற்கும் கிரிசில்டாவுக்கும் சம்பந்தமே இல்லை” என்று வாதிட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில் குமார், இன்று தீர்ப்பளித்தபோது, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தின் மனுவை முழுமையாக தள்ளுபடி செய்தார். இதனால் ரங்கராஜ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த தீர்ப்புக்குப் பின் மகிழ்ச்சியில் இருக்கும் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராமில், “உண்மை ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும்… ரங்கராஜ் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது… உன்னைச் சாட உன் வீரமான மகன் எழுந்து வருவான்!”
என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அப்பாவானார் பிரேம்ஜி அமரன்- வீட்டில் புதிய செல்வம்!

More in Cinema News

To Top