Connect with us

யோகிபாபு நடிப்பில் உருவான ‘போட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

Cinema News

யோகிபாபு நடிப்பில் உருவான ‘போட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

யோகிபாபு நடிப்பில் உருவான ‘போட்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கால் பதித்து இன்று சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு . தமிழ் , தெலுங்கு , மலையாளம் ,ஹிந்தி என பல மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து வரும் இவரது நடிப்பில் தற்போது ஏரளமான திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

அந்தவகையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகி உள்ள புதிய படமே போட் . சிம்பு தேவன் இயக்கத்தில் தரமாக தயாராகி உள்ள இப்படத்தில் யோகிபாபுவுடன் கௌரி கிஷான், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட்டுக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டு ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கீர்த்தி சுரேஷ் புதிய படம் “Sathyavan Savithiri” என்ற பெயரில் அறிவிக்கப்பட்டது.

More in Cinema News

To Top