Connect with us

சம்பவம் செய்த கோட் – பல சாதனைகளை வரிசையாக முறியடித்து வரும் GOAT படத்தின் டிரைலர்..!!

Cinema News

சம்பவம் செய்த கோட் – பல சாதனைகளை வரிசையாக முறியடித்து வரும் GOAT படத்தின் டிரைலர்..!!

தளபதியின் நடிப்பில் உருவாகி உள்ள The GOAT’ படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்த ட்ரைலர் பல சாதனைகளை நிகழ்த்தி வருவது தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜயின் மிரளவைக்கும் மிடுக்கான நடிப்பில் தற்போது வேற லெவலில் சிறப்பாக தரமாக உருவாகி வரும் திரைப்படமே THE GOAT .

AGS நிறுவனம் நிறுவனத்தின் ஏகபோக பிரம்மாண்ட பொருட்செலவில் பல நாடுகளில் சத்தமின்றி உருவாகி உள்ள இப்படத்தை மாநாடு , மங்காத்தா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய வெங்கட் பிரபு தரமாக இயக்கி சிறப்பாக செதுக்கி உள்ளார்.

BGM கிங் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் விஜய் உடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் கமிட்டாகி நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என அனைவரும் காத்திருந்த நிலையில் நேற்று இப்படத்தின் செம மாஸான ட்ரைலரை படக்குழு வெளியிட்டது .

இதையடுத்து இந்த ட்ரைலரை ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடி வரும் நிலையில் தற்பொழுது படத்தின் டிரைலர் யூடியூபில் 20 மணி நேரத்தில் 24 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் இந்திய சினிமா டிரைலரில் வேகமான 10 லட்ச லைக்குகளை பெற்ற திரைப்படம் உள்ளிட்ட பல சாதனைகளை கோட் ட்ரைலர் படைத்து வருகிறது .

இந்த மகிழ்ச்சியான செய்தியை படத்தின் தயாரிப்பாளர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஷங்கரின் கனவு படம்: ஹீரோ யார்? ரசிகர்களிடையே பரபரப்பு

More in Cinema News

To Top