Connect with us

துள்ளுவதோ இளமை நடிகர் அபிநய் மறைவு — திரையுலகை உலுக்கிய துயரம்

Cinema News

துள்ளுவதோ இளமை நடிகர் அபிநய் மறைவு — திரையுலகை உலுக்கிய துயரம்

“துள்ளுவதோ இளமை” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமான நடிகர் அபிநய், இன்று (நவம்பர் 10) அதிகாலை 4 மணியளவில் காலமானார். உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களாகவே அவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்று கூறப்படுகிறது.

மிகுந்த துயரமான செய்தி என்னவென்றால், அபிநய்க்கு நெருங்கிய உறவினர்கள் எவரும் இல்லாததால், அவரது மறைவுக்குப் பிறகு அவரது உடலை எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்ய யாரும் முன்வரவில்லை. இதனால் அவரது உடல் ஆதரவற்ற நிலையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் KPY பாலா, அபிநயின் உடல்நிலை பற்றி சில மாதங்களுக்கு முன் அறிந்து, அவருக்கு மருத்துவ உதவியும் நிதி ஆதரவும் வழங்கி வந்தார். ஆனால், அவரது முயற்சிகளும் விதியின் முன்னால் தோல்வியடைந்தது. பாலா உள்ளிட்ட பலரும் தற்போது நடிகர் சங்கம் மற்றும் திரைப்பட அமைப்புகளை அணுகி, அபிநயின் உடலை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி பரவி, பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். “துள்ளுவதோ இளமை” படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராக பிரபலமான அபிநயின் மறைவு, தமிழ் திரையுலகிற்கு இன்னொரு வேதனையான இழப்பாக அமைந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிம்புவின் ‘அரசன்’ – கவின் வெளியிட்ட அதிரடி ரகசியம்!

More in Cinema News

To Top