Connect with us

சம்பவம் லோடிங் : வெளியானது ‘கங்குவா’ படத்தின் அடுத்த அப்டேட்..!!

Cinema News

சம்பவம் லோடிங் : வெளியானது ‘கங்குவா’ படத்தின் அடுத்த அப்டேட்..!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் முதல் பாடல் குறித்த சிறப்பான அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் காட்டுதனமான நடிப்பில் உருவாகி ரிலீசுக்காக வெய்ட்டிங்கில் இருக்கும் திரைப்படம் தான் கங்குவா .

‘சிறுத்தை’ சிவா இயக்கியுள்ள இப்படத்தை UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து மாபெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

வரலாற்று கதைக்களம் கொண்ட இப்படத்தில் கதையின் நாயகனாக சூர்யா நடிக்க அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார் . மேலும் இவர்களுடன் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ரிலீசுக்காக ரசிகரக்ள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் கங்குவா படக்குழுவிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான அப்டேட் கிடைத்துள்ளது . அது என்னவென்றால் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தின் முதல் பாடல் வரும் 23ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கென் கருணாஸ் இயக்கும காதலன் படப்பிடிப்பு பூஜை ஆரம்பம்

More in Cinema News

To Top