Connect with us

இணையத்தை கலக்கும் ‘டெவில்’ திரைப்படத்தின் புதிய பாடல்..!!

Cinema News

இணையத்தை கலக்கும் ‘டெவில்’ திரைப்படத்தின் புதிய பாடல்..!!

விதார்த் நடிப்பில் உருவாகி வரும் டெவில் திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகி இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

‘சவரக்கத்தி’ திரைப்படத்தின் இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டெவில்’. இந்த படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் மேலும் இவர்களுடன் பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார் இயக்குனர் மிஷ்கின்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் , அண்மையில் இப்படத்தின் ப்ரோமோ விடீயோவையும் படக்குழு வெளியிட்டது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நன்றாக புரிந்துகொண்ட படக்குழு அதற்கேற்ப ஒவ்வரு அப்டேட்டாக கொடுத்து வருகிறது அந்தவகையில் இப்படத்தின் புதிய பாடல் ஒன்றையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது .

கடவுளுக்கு கோரிக்கை என தொடங்கும் இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல முறையில் ரீச் ஆகி வருகிறது . இப்பாடலின் வரிகளை மிஷ்கின் எழுத பிரியங்கா பாடியுள்ளார்.

இப்படம் நாளை உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் வெற்றி படமாக அமையுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  23 வகை வெளிநாட்டு நாய்களுக்கு தமிழ்நாட்டில் தடை – அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு..!!

More in Cinema News

To Top