Connect with us

‘LIK’ படத்தின் புதிய சிங்கிள் ‘பட்டுமா’ இன்று மாலை ரிலீஸ் – பிரதீப் & விக்னேஷ் சிவன்

Cinema News

‘LIK’ படத்தின் புதிய சிங்கிள் ‘பட்டுமா’ இன்று மாலை ரிலீஸ் – பிரதீப் & விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் ‘LIK’ (Love Insurance Company) படத்தில், அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத்தின் பாடல்கள் மீது ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் சிறப்பு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படப்பணிகள் முழுமையாக முடிந்துள்ள நிலையில், படம் அடுத்த மாதம் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், ‘LIK’ படத்தின் இரண்டாவது பாடல் ‘பட்டுமா’ இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகிறது. இதற்கான போஸ்டரை முன்னதாக வெளியிட்டிருந்த படக்குழு, தற்போது பாடல் ப்ரோமோவையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘பட்டுமா’ பாடலின் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவனே எழுதியிருப்பது, பாடல் மீது எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “சில்க் ஸ்மிதாவுடன் கடைசி நாள்… ஆனந்தராஜ் சொன்னது மனதை நெகிழச்செய்யும்!”

More in Cinema News

To Top