Connect with us

கேப்டன் நினைவிடத்தில் உதவி கேட்ட தாய் – கையில் இருந்த பணத்தை அப்படியே கொடுத்த kpy பாலா

Cinema News

கேப்டன் நினைவிடத்தில் உதவி கேட்ட தாய் – கையில் இருந்த பணத்தை அப்படியே கொடுத்த kpy பாலா

கேப்டன் நினைவிடத்தில் உதவி கேட்ட தாய்க்கு சற்றும் யோசிக்காமல் கையில் இருந்த பணத்தை அப்படியே கொடுத்த kpy பாலாவின் வீடியோ

சின்னத்திரையில் இருந்த பலர் இன்று வெள்ளித்திரையில் கலக்கிக்கொண்டிருக்கின்றனர் . அந்தவகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான kpy நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனம் கவர்ந்த பாலா இன்று தமிழ் சினிமாவில் நடிகராகவும் , தொகுப்பாளராகவும் , சமூக சேவகராகவும் கலக்கி வருகிறார்.

பைக் வருத்தப்பட்ட வாலிபனுக்கு பைக் , குழந்தைகளுக்கு படிப்பு செலவு , அம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது என தன்னால் முடிந்ததை யார் உதவியும் இல்லாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில் பாலாவுக்கு 15 ஆம் ஆண்டு நார்வே சினிமா விருது விழா நிகழ்ச்சியில் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் விருது வழங்கப்பட்டது.

அந்த விருதை பெற்றுக்கொண்ட பாலா சென்னைக்கு வந்ததும் அதை எடுத்துக்கொண்டு நேராக விஜயகாந்த் சமாதியில் வைத்து விழுந்து கும்பிட்டு அதை எடுத்துக் கொள்ளும் வீடியோ செம வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் கேப்டன் நினைவிடத்திற்கு வந்த ஒரு தாய் தனது மகனுக்கு பள்ளி கட்டணம் செலுத்த வசதி இல்லை என கண்ணீருடன் அழுதுள்ளார் அப்போது சற்று யோசிக்காமல் பாக்கெட்டில் இருந்த அனைத்து ₹500 நோட்டுக்களையும் எடுத்து அப்படியே அவருக்கு கொடுத்து பீஸ் கட்டிடுங்க எனக் கூறியுள்ளார் . பாலாவின் இந்த செயல் தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இன்று மாலை வெளியாகவுள்ள பைசன் படத்தின் 'காளமாடன் கானம்' பாடல்

More in Cinema News

To Top