Connect with us

‘இந்தியன்’ல மறுத்த மேக்கப்… ‘தாய் கிழவி’யில் ஏற்ற மாற்றம் – ராதிகாவின் நடிப்பு பயணம்

Cinema News

‘இந்தியன்’ல மறுத்த மேக்கப்… ‘தாய் கிழவி’யில் ஏற்ற மாற்றம் – ராதிகாவின் நடிப்பு பயணம்

நடிகை ராதிகா, சமீபத்திய பேட்டியில் தனது நடிப்புப் பயணத்தில் ஏற்பட்ட முக்கியமான மனநிலை மாற்றத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். ஒருகாலத்தில், இந்தியன் படத்தில் பயன்படுத்தப்பட்ட புராஸ்தடிக் மேக்கப்பை பார்த்ததும் அச்சமடைந்து அந்த வாய்ப்பை மறுத்ததாக கூறிய அவர், தற்போது தாய் கிழவி படத்தில் அதேபோன்ற மேக்கப்புடன் முழுமையாக மாறி நடித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தக் கதை முதலில் சொல்லப்பட்டபோது தன்னை பெரிதாக ஈர்க்கவில்லை என்றும், அறிமுக இயக்குநர் என்பதால் படத்தின் வடிவம் குறித்து சந்தேகம் இருந்ததாகவும் ராதிகா தெரிவித்துள்ளார். ஆனால், அவரது கணவர் சரத், “இது அருமையான கதை… ஏன் வேண்டாம் என்று சொல்கிறாய்?” என கேட்டது, தன் எண்ணத்தை மாற்றத் தூண்டியதாக அவர் நினைவுகூர்கிறார்.

பின்னர், தசாவதாரம் படத்தை பார்த்தபோது, நடிகர் கமல் ஹாசன் கூறிய “நடிகரை காட்ட வேண்டாம்; கதாபாத்திரத்தை கொண்டு வர வேண்டும்” என்ற கருத்து தன் மனதில் ஆழமாக பதிந்ததாகவும், அதுவே இந்த வேடத்தை ஏற்கும் தைரியத்தை கொடுத்ததாகவும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, தனது தோற்றத்தில் முழுமையான மாற்றம் கொண்டுவர முடிந்தால் மட்டுமே இந்தப் படத்தில் நடிப்பதாக தயாரிப்பாளர் குழுவிடம் தெரிவித்ததாக ராதிகா கூறுகிறார். அந்த மாற்றத்திற்காக, மேக்கப் போட சுமார் நான்கரை மணி நேரமும், அதை அகற்ற இரண்டரை மணி நேரமும் எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த தோற்றத்தை இயக்குநர் பாரதிராஜா பார்த்தபோது, தனது அம்மாவை நினைத்து உணர்ச்சிவசப்பட்டு அழுததாகவும் ராதிகா பகிர்ந்துள்ளார்.

வயதும், தோற்றமும் ஒரு நடிகைக்கு தடையாக இருக்க வேண்டியதில்லை; கதாபாத்திரத்தின் உண்மையை திரையில் கொண்டு வருவதே உண்மையான நடிப்பு என்பதை ராதிகாவின் இந்த அனுபவம் வலியுறுத்துகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎬 ‘தலைவர் தம்பி தலைமையில்’ – பிப்ரவரி 12 முதல் OTT-யில், குடும்ப ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட்

More in Cinema News

To Top