Connect with us

“சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவிருக்கும் தமிழ்ப் படங்கள் லிஸ்ட் இதோ..!”

Cinema News

“சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவிருக்கும் தமிழ்ப் படங்கள் லிஸ்ட் இதோ..!”

அடுத்த மாதம் தொடங்கப்பட இருக்கும் 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பு நடத்தும் சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14 முதல் 21 வரை நடைபெறுகிறது.

இந்த விழாவில் 57 நாடுகளைச் சேர்ந்த 126 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த விழாவில் தொடக்க நிகழ்ச்சியின்போது, இந்த ஆண்டுக்கான கேன்ஸ் விருது வென்ற ’அனாடமி ஆஃப் எ ஃபால்’ என்ற திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இதில் 8 ஈரானியப் படங்கள், 5 கொரியப் படங்கள் உள்ளிட்ட படங்கள் இடம்பெறுகின்றன.

இந்த திரைப்பட விழாவில், மொத்தம் 12 தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அவை..,
அநீதி – வசந்தபாலன்
அயோத்தி – மந்திர மூர்த்தி
கருமேகங்கள் கலைகின்றன – தங்கர்பச்சான்
மாமன்னன் – மாரி செல்வராஜ்
போர் தொழில் – விக்னேஷ் ராஜா
ராவண கோட்டம் – விக்ரம் சுகுமாறன்
சாயாவனம் – அனில்
செம்பி – பிரபு சாலமன்
ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் – சந்தோஷ் நம்பிராஜன்
உடன்பால் – கார்த்திக் சீனிவாசன்
விடுதலை பாகம் 1 – வெற்றிமாறன்
விந்தியா விக்டிம் வெர்டிக்ட் வி3 – அமுதவாணன்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top