Connect with us

விஜய் குமார் நடிக்கும் ‘எலக்சன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!!

Cinema News

விஜய் குமார் நடிக்கும் ‘எலக்சன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!!

‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் உறியடி என்ற படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் படு பேமஸ் ஆனவர் தான் நடிகர் விஜய்குமார்.

நடிப்பு இயக்கம் என இரண்டிலும் தனது முழு உழைப்பை கொடுக்கும் இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாக மாறாமல் இருப்பது சற்று வருத்தம் தான்.

இதையடுத்து இயக்குநர் லோகேஷ் தயாரிப்பில் விஜயகுமாரின் நடிப்பில் உருவான திரைப்படம் தான் Fight Club . ஏராளமான ஆக்சன் காட்சிகளுடன் உருவான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவரது நடிப்பில் தமிழ் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோவிந்த் வ வசந்த் இசையமைக்கும் இந்த இப்படத்தின் படபிபிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மனசாட்சி இருந்தால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்ற செய்தியை வெளியிட்டிருக்க மாட்டார் - வானதி சீனிவாசன் கண்டிப்பு..!!

More in Cinema News

To Top