Connect with us

வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியர் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியர் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

ஏரளமான திரை நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்துள்ள வேட்டையன் படத்தில் நடிகை மஞ்சு வாரியரின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படமே வேட்டையன் . ஞானவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் தலைவருடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனத்தின் ஏகபோக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் நடித்த நட்சத்திரங்களின் கதாபாத்திரம் குறித்த வீடியோவை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியரின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அனுஷ்கா ஷெட்டி திருமணம் விரைவில்? புதிய தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது!

More in Cinema News

To Top