Connect with us

என்னையும் ஏமாத்திடாங்க சார் : ஆன்லைனில் ஆர்டர் செய்த அனிதா சம்பத்துக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

Cinema News

என்னையும் ஏமாத்திடாங்க சார் : ஆன்லைனில் ஆர்டர் செய்த அனிதா சம்பத்துக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக கலைத்துறையில் கால்பதித்தவர் அனிதா சம்பத். தமிழின் மீது மேற்கொண்ட பற்றாலும் நேர்த்தியான உச்சரிப்பாலும் ஏராளமான குடும்ப ரசிகர்களின் அன்பை பெற்றார்.

இதையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனியாக யூடியூப் சேனல் தொடங்கிய அனிதா சம்பத் அவரது வாழ்வில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் .

அமேசான் ஷாப்பிங் தளத்தில் ஸ்டோரேஜ் பாக்ஸ் ஒன்றை ஆர்டர் அனிதாவுக்கு பேரதிர்ச்சியும் ஏமாற்றமும் பரிசாக கிடைத்துள்ளது . ஸ்டோரேஜ் பாக்ஸ் ஆர்டர் செய்த அவருக்கு அழுக்கான புடவை ஒன்று டெலிவரி ஆகியுள்ளது .

இதனை கன்னடத்தும் அதிர்ச்சியடைந்த அனிதா இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார் .

ஆன்லைனில் ஆர்டர் செய்த பலருக்கு தாங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் வராமல் வேறு ஒரு பொருள் கிடைக்க தங்களது ஏமாற்றத்தை வேதனையுடன் தெரிவித்து வந்தாலும் இதுகுறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இதுபோன்ற ஏமாற்று வேலைகள் தொடர்கதையாய் தொடர்ந்து வருவது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

https://www.instagram.com/reel/C88u_5mRlyg/?utm_source=ig_web_copy_link

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  70 நாட்கள் பிக்பாஸ் பயணம்… வியானா மற்றும் ரம்யா ஜோ சம்பளம் குறித்து வைரல் தகவல்

More in Cinema News

To Top