Connect with us

🎬 ₹1000 கோடி சவால்: தமிழ் சினிமா ஏன் இன்னும் அடையவில்லை ?

Cinema News

🎬 ₹1000 கோடி சவால்: தமிழ் சினிமா ஏன் இன்னும் அடையவில்லை ?

அதிக பட்ஜெட், முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் பெரிய சந்தை இருந்தும் தமிழ் சினிமா இதுவரை ₹1,000 கோடி வசூல் படத்தை வழங்கவில்லை என்பது தற்போது பரவலாக விவாதமாகி வருகிறது. தமிழ் திரையுலகின் அதிகபட்ச வசூல் படங்கள் சுமார் ₹800 கோடி வரை மட்டுமே சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மாறாக, comparatively சிறிய மார்க்கெட்டாக கருதப்பட்ட கன்னட சினிமா, KGF: Chapter 2 மூலம் ₹1,200 கோடி வசூல் செய்து பான்-இந்தியா சாதனை படைத்ததுடன், Kantara சுமார் ₹900 கோடி வசூலை எட்டிச் சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்த வெற்றிகளுக்குப் பின்னணி குறித்து சினிமா வட்டாரங்கள் பேசுகையில், நட்சத்திர மதிப்பை விட வலுவான கதைக்களம், மண் சார்ந்த உணர்வு, சரியான பான்-இந்தியா மார்க்கெட்டிங் மற்றும் வாய்மொழி பாராட்டுகள் (word of mouth) தான் முக்கிய காரணங்கள் எனக் கூறுகின்றனர். இதனால், “பெரிய பட்ஜெட் மட்டுமே போதுமா, அல்லது உலகளவில் இணைக்கும் கதைகள்தானா வெற்றியை தீர்மானிக்கின்றன?” என்ற கேள்வி தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் தீவிரமாக எழுந்துள்ளது. 🎬🔥


மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎬 ‘ரஜினி 173’ இயக்குநர் அறிவிப்பு: சிபி சக்ரவர்த்தி உறுதி

More in Cinema News

To Top