Connect with us

“கட்சி தொடங்கும் முன்பே தலைவர், பொதுச் செயலாளர் தேர்வா?! தரமாக கலக்கும் தலைவர் விஜய்!”

Cinema News

“கட்சி தொடங்கும் முன்பே தலைவர், பொதுச் செயலாளர் தேர்வா?! தரமாக கலக்கும் தலைவர் விஜய்!”

தளபதி விஜய் நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை செய்தார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி விஜய் அரசியல் கட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டது மட்டுமின்றி கட்சி ஆரம்பிக்கும் முன்பே தலைவர், பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் தேர்வு நடைபெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

விஜய் ஆரம்பிக்க இருக்கும் அரசியல் கட்சி குறித்து அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்றும் அதுமட்டுமின்றி அவர் ஆரம்பிக்க இருக்கும் கட்சி தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் அரசியல் கட்சி தொடங்கும் தினத்தில் இது குறித்து அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் தேர்தலில் போட்டியிடுவது, எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது போன்ற ஆலோசனையும் நடைபெற்றதாகவும், கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மொத்தத்தில் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த பணிகள் செம்ம ஸ்பீடில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “கணவன் போல் பிள்ளை…” – ஜாய் கிரிஸில்டாவின் மனதை உருக்கும் பதிவு!

More in Cinema News

To Top