Connect with us

ரஜினியின் ‘வேட்டையன்’ பட புதிய Poster Update!

Cinema News

ரஜினியின் ‘வேட்டையன்’ பட புதிய Poster Update!

‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவரது 170-வது படமான இதில், அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை சென்றனர்.

அங்கு, ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது புதுச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘வேட்டையன்’ படத்தின் புதிய போஸ்டர் நாளை காலை 9.15 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விமல் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!!

More in Cinema News

To Top