Connect with us

சூர்யகுமார் யாதவ் கருத்துக்கு பாக் வீரர் ஆதரவு

Sports

சூர்யகுமார் யாதவ் கருத்துக்கு பாக் வீரர் ஆதரவு

லாகூர்: செப்டம்பர் இறுதியில் துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தானை லீக், சூப்பர்-4 மற்றும் இறுதி என மூன்று முறை சந்தித்தபோதும், மூன்றிலும் இந்தியாவே வெற்றி பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பிரச்சினை காரணமாக, இந்தியா–பாகிஸ்தான் அணிகள் தற்போது ஐ.சி.சி. மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் போட்டிகளில் மட்டுமே மோதுகின்றன. இதனால், கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் “பரம எதிரிகள்” எனக் கருதப்படுகின்றன.

ஆனால், தன்னுடைய பார்வையில் இனி பாகிஸ்தான் இந்தியாவுக்கு போட்டியாளர் அல்ல என சூர்யகுமார் யாதவ் கூறியிருந்தார். “இரு அணிகள் 15–20 முறை விளையாடி, வெற்றி தோல்விகள் 7–7 அல்லது 8–7 என இருந்தால் அது ஒரு போட்டி. ஆனால் 13–0 அல்லது 10–1 என இருந்தால், அதை என்ன என்று சொல்லுவது எனக்குத் தெரியவில்லை. இது இனி ஒரு போட்டியல்ல,” என அவர் கிண்டலாக கூறினார்.

இதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இப்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசான் கான், சூர்யகுமார் யாதவின் கருத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் கூறியதாவது: “ஐ.சி.சி. போட்டிகளின் தரவுகளைப் பார்த்தால், சூர்யகுமார் யாதவ் சொன்னது தொழில்நுட்ப ரீதியாக சரியே என எனக்குத் தோன்றுகிறது. இதைச் சொல்லலாமா வேண்டாமா என்று நினைத்தேன், ஆனால் அவர் தவறாகச் சொல்லவில்லை,” என்றார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் விலகல்

More in Sports

To Top