Connect with us

“தலைவர் வீட்டையும் விட்டுவைக்கலயா” சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் உள்ளே புகுந்த வெள்ளம் – வைரல் வீடியோ..

Cinema News

“தலைவர் வீட்டையும் விட்டுவைக்கலயா” சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் உள்ளே புகுந்த வெள்ளம் – வைரல் வீடியோ..

கடந்த 3 நாட்களாக சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தொண்டிற்கும் நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வீட்டிலும் வெள்ளம் புகுந்துள்ள காட்சி இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது . இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இருப்பினும் ஒரு சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் அந்த பகுதிகளில் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. பாரபட்சமின்றி கோரத்தாண்டவம் ஆடிய இந்த கனமழையால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் பல சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் .

விஷால், விஷ்ணு விஷால், நமீதா, ஆத்மிகா , மன்சூர் அலிகான் , உள்ளிட்ட பல பிரபலங்கள் வசிக்கும் வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் கடும் சிரமத்திற்கு ஆளாகி பின்னர் பேரிடர் மீட்பு குழுவால் காப்பாற்றப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது போஸஸ் கார்டனில் உள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிலும் வெள்ள நீர் புகுந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது .

பல VIPகள் வசிக்கும் காஸ்ட்லி ஏரியாவான போஸஸ் கார்டன் பகுதியும் வெள்ளத்தில் சிக்கியுள்ளதால் இந்த வெள்ளம் தலைவர் வீட்டையும் விட்டு வைக்கலயா என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Actress to Wildlife Photographer! 🐅🎥 மாளவிகாவின் அசத்தல் திறமை!

More in Cinema News

To Top