Connect with us

மோகன்லாலின் 360வது படம் குறித்து வெளியான தாறுமாறு அப்டேட்..!!!

Cinema News

மோகன்லாலின் 360வது படம் குறித்து வெளியான தாறுமாறு அப்டேட்..!!!

தருண் மூர்த்தி இயக்கும் மோகன்லாலின் 360வது படம் குறித்த தாறுமாறான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

மலையாள திரையுலகில் இருக்கும் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால்.மலையாளம் , தமிழ் என பல மொழி படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் மோகன்லால் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலிலும் இடப்பிடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் மோகன்லாலின் 360வது படத்தை தருண் மூர்த்தி இயக்கும் நிலையில் இப்படம் குறித்த சிறப்பான தரமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது .

ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் நடிகை ஷோபனா முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது .

நடிகை ஷோபனா 50க்கும் மேற்பட்ட படங்களில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ளார் . இவர்களின் இந்த காம்போ ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் மோகன்லால் – ஷோபனா ஜோடி திட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் இணைந்துள்ளது மோகன்லாலின் ரசிகர்களுக்கு ஏகபோக மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள நடிகர் மோகன்லாலுக்கு இந்த வெற்றியை தேடி தருமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “சிவகார்த்திகேயன் Big Update! 😲 பராசக்தி டப்பிங் முடிந்தது… Pongal Treat!”

More in Cinema News

To Top