Connect with us

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு

Sports

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு

ஐதராபாத்:
19-வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பிசிசிஐ, 10 அணிகளுக்கும் உத்தரவிட்டது.

அதனையடுத்து, அனைத்து 10 அணிகளும் தங்களது ‘ரிட்டேன்’ மற்றும் ‘ரிலீஸ்’ பட்டியல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன. மொத்தம் 173 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, வரும் சீசனுக்காக டிராவிஸ் ஹெட், பேட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, கிளாசென் உள்ளிட்ட முக்கிய வீரர்களை தக்கவைத்துள்ளது.

மேலும், அடுத்த ஐபிஎல் சீசனிலும் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸே தொடர்வார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது, கம்மின்ஸ் தலைமையில் ஐதராபாத் அணி விளையாடும் மூன்றாவது சீசன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘சூர்யா 47’ படத்தில் சிம்பு? ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

More in Sports

To Top