Connect with us

‘தலைவர் 173’ படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி – ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

Cinema News

‘தலைவர் 173’ படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி – ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

ரஜினிகாந்த் நடிக்கவிருந்த ‘தலைவர் 173’ படத்திலிருந்து இயக்குநர் சுந்தர். சி விலகிய செய்தி தற்போது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், சுந்தர். சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்புடன் வெளியான வீடியோவும் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஆனால் திடீரென சுந்தர். சி வெளியிட்ட கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

‘அருணாச்சலம்’ பிறகு மீண்டும் ரஜினியுடன் இணையும் வாய்ப்பு கிடைத்ததால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் சுந்தர். சி திடீரென இப்படத்திலிருந்து விலகியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சுந்தர். சி வெளியிட்டுள்ள கடிதத்தில்,

“கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இரு பெரும் நாயகர்களுடன் பணியாற்றும் அபூர்வ வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் சில எதிர்பாராத சூழ்நிலைகளால் இந்த படத்திலிருந்து விலகும் கடினமான முடிவை எடுக்க வேண்டி வந்தது. இதனால் யாருக்காவது மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும். இருவரின் ஆசீர்வாதமும் எனக்கு என்றும் துணைநின்றுகொண்டே இருக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சுந்தர். சி விலகியதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு பேச்சுக்கள் திரையுலகில் கிளம்பியுள்ளன. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் இப்படத்தை இனி யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே தீவிர ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிலர் “ரஜினி சுந்தர். சி இயக்கத்தில் திருப்தியடையவில்லை” என ஊகிக்க, மற்றவர்கள் “உள் காரணங்கள் இருக்கலாம்” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜ்கமல் நிறுவனம் இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "Real Story or Fiction? 🤔 'காந்தா' படம் யாரை சுட்டிக்காட்டுகிறது?"

More in Cinema News

To Top