Connect with us

“சுப்மன் கில் இன்னும் முழுமையாக இல்லை” – கேப்டன்ஷிப் பற்றி வெஸ்ட் இண்டீஸ் வீரர் விமர்சனம்

Sports

“சுப்மன் கில் இன்னும் முழுமையாக இல்லை” – கேப்டன்ஷிப் பற்றி வெஸ்ட் இண்டீஸ் வீரர் விமர்சனம்

இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக ரோஹித் சர்மா ஓய்வுபெற்ற பிறகு, இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் பொறுப்பு 26 வயதான சுப்மன் கிலுக்கு வழங்கப்பட்டது. வலதுகை பேட்டரான கில், இங்கிலாந்தில் நடைபெற்ற ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 750 ரன்களுக்கு மேல் எடுத்ததோடு, கேப்டனாகவும் தன்னை சிறப்பாக நிரூபித்தார். இதனால் இங்கிலாந்தில் தொடரின் முடிவு 2-2 சமநிலை என முடிந்தது.

தொடர்ந்து, உள்நாட்டில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் கில் வென்று இந்திய அணிக்கு முக்கிய வெற்றி கிடைக்க வைத்தார். முதல் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அவர், டெஸ்ட் அணியின் நம்பிக்கையையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

என்றாலும், சில விமர்சனங்களும் எழுந்துள்ளன. வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இயன் பிஷப் சுப்மன் கிலின் கேப்டன்ஷிப்பை பற்றி கூறியதாவது:

“சுப்மன் கில் இன்னும் முழுமையாக கேப்டன் ஆகவில்லை. அவர் வளர்ந்துவருகிறார், ஆனால் ஒரு அணியை டெஸ்ட்களில் வழிநடத்த கிலுக்கு இன்னும் பொறுமை தேவை. கேப்டனாக யுக்திகளை வகுப்பதில் குறைந்தது இரண்டு சீசன்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நிச்சயம் கோலி மற்றும் ரோஹித் அவருக்கு அனுபவம் கற்றுத் தருவார்கள். அவருக்கு பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் இரு திறனிலும் வளர செய்ய கொஞ்சம் நேரமும் வாய்ப்பும் கொடுக்க வேண்டும்.”

இந்த விமர்சனம், சுப்மன் கிலின் திறனை பாராட்டினாலும், கேப்டனாக முழுமையாக உறுதிப்பெற இன்னும் சில அனுபவங்கள் தேவை என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  லக்னோ அணியின் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்டார் கேன் வில்லியம்சன்

More in Sports

To Top