Connect with us

தடபுடலான கறி விருதுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன் – வைரல் போட்டோஸ்

Cinema News

தடபுடலான கறி விருதுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன் – வைரல் போட்டோஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK23’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இன்று தடபுடலான கறி விருந்து நடைபெற்றுள்ளது பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது .

தமிழ் உள்பட பல மொழி படங்களை தயாரித்தும் இயக்கியும் வரும் இயக்குநர்
ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளையான சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து அவரது 23 ஆவது படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் இப்படத்தின் பூஜை நடைபெற்று படப்பிடிப்பும் சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது .

ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி நடிக்க இவர்களுடன் பல இளம் நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனித்துவமான கதைகளுக்கு பெயர்போன இயக்குநராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் நம்ப எஸ்.கே அவர்களை வைத்த எந்த மாதிரியான கதையினை நமக்கு படமாக எடுத்து கொடுக்க போகிறார் என்று தெரியவில்லை ஆனால் நிச்சயம் ஒரு பேமிலி என்டர்டைனர் படத்தை நாம் எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் இன்று தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அமரன் படத்தின் 2 nd லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரது 23 ஆவது படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தடபுடலான கறி விருந்துடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி உள்ளார்.

எஸ்.கேவின் இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தரம்சாலாவில் தர்மஅடி கொடுக்குமா CSK..? டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top