Connect with us

Shooting Accident!சண்டைக்காட்சியில் காயமடைந்த எஸ்.ஜே.சூர்யா

Cinema News

Shooting Accident!சண்டைக்காட்சியில் காயமடைந்த எஸ்.ஜே.சூர்யா

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2, ஜெயிலர் 2 உள்ளிட்ட பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் இயக்குநராக திரும்பியுள்ள செய்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ‘கில்லர்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார்.

கோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஞ்சல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படம், எஸ்.ஜே.சூர்யாவின் கனவு படமாக கருதப்படுகிறது. இதில் காருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், ஜெர்மனியில் இருந்து புதிய பிஎம்டபிள்யூ கார் கூட இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கான சண்டைக்காட்சி படப்பிடிப்பு சென்னை பாலவாக்கத்தில் நடைபெற்று வந்தது. அந்த காட்சியில் கயிறு கட்டியபடி நடித்த எஸ்.ஜே.சூர்யா, கீழே இறங்கும் போது எதிர்பாராத விதமாக விபத்தைச் சந்தித்தார்.

காலில் கம்பிகள் குத்தியதால் அவர் படுகாயம் அடைந்த நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 2 தையல்கள் போடப்பட்டன. மருத்துவர்கள் அவருக்கு 15 நாட்கள் முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளதால், தற்போது அவர் சிகிச்சையில் ஓய்வெடுத்து வருகிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎥 ஜனநாயகன் ரீமேக் சர்ச்சை: இன்று வெளியாகும் ட்ரெய்லர் பதில் தருமா?

More in Cinema News

To Top