Connect with us

சிவகார்த்திகேயன்–சாய்பல்லவி ‘அமரன்’: சர்வதேச கவனம் ஈர்த்த தமிழ்ப் படம்

Cinema News

சிவகார்த்திகேயன்–சாய்பல்லவி ‘அமரன்’: சர்வதேச கவனம் ஈர்த்த தமிழ்ப் படம்

சர்வதேச திரைப்பட விழாவில் அமரன் படத்திற்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – சாய்பல்லவி ஜோடி நடித்த இந்த படம், மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. கமல்ஹாசன் தயாரித்த அமரன், உலகளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்து குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றது.

சமீபத்தில், கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருது விழாவில் ‘சிறந்த பிறமொழித் திரைப்படம்’ விருதை பெற்ற அமரன், 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) தங்க மயில் விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்மீது, வரும் நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் 56வது IFFI விழாவில், பனோரமா பிரிவின் தொடக்கப்படமாக அமரன் திரையிடப்பட இருப்பதாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 81 நாடுகளின் 240-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் அமரன் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் OTT தளங்களில் இந்த வாரம் புதிய படங்கள் வெளியீடு – ரசிகர்களுக்கு வீட்டு திரையரங்க அனுபவம்!

More in Cinema News

To Top